If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
பதிப்புரை

""செயற்கரிய செய்வர் பெரியர்–––'' என்னும் பொய்யா மொழிக்கு ஏற்ப, ""தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஓர் ஆய்வு என்னும் இந்நூலில், தமிழ் (சித்த) மருத்துவத்தின் சிறப்பை–பெருமையை – பழைமையைப் பல கூறுகளாகப் பலப்பல ஆண்டுகள் மிகக் கடினமாக உழைத்து – ஆராய்ந்து, அரிய நூலாக – அரும்பெரும் நூலாகத் தமிழ்த் தாய்க்கு ஒரு மகுடமாக அர்ப்பணித்துள்ளதன் ஆமூலம், இந்நூலாசிரியர் முனைவர் இர. வாசுதேவன் அவர்கள் செயற்கரிய செயலைச் செய்துள்ளார் என்றால் மிகையல்ல!

""... முனைவர் இர. வாசுதேவன் அவர்கள் அரியதொரு தலைப்பினை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இத்தலைப்பினை நான் அவருக்குப் பரிந்துரைத்தபோது மலைக்காது ஏற்றுக் கொண்டார். தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆராயும் முயற்சிக்கு அடிப்படையாக விளங்கக்கூடிய வகையில், "தமிழ் மருத்துவ இலக்கியங்கள் என்னும் இப்பொருளில் ஆய்வு மேற்கொண்டு, அதனைத் திறம்படவும் செய்துள்ளார்..'' என்று, சென்னைப் பல்கலைக் கழக அண்ணா பொது வாழ்வியல் மைய, இணைப் பேராசிரியர் டாக்டர். கோ. கிருட்டிணஆர்த்தி அவர்கள் தம் அணிந்துரையில் இந்நூலின் பெருமையினைப் புகழ்ந்துள்ளார்.

""கற்கண்டின் எந்தப் பகுதியைக் கடித்துப் பார்த்தாலும் அது இனிக்கத்தான் செய்யும். முனைவர் வாசுதேவனின் இந்தப் படைப்பும் அத்தகையதே'' என்று, சித்தவைத்தியப் பேராசிரியர் புது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் இந்நூலுக்கு மேலும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆம் ! இவர் இந்நூலில் பகுத்துப் பிரித்து ஆய்ந்து விளக்கியுள்ள ஆறு இயல்களும், கற்கண்டின் சுவையினும் மிகுதியாகவே சுவைபட அமைந்துள்ளன என்பதுதான் உண்மை! 5000 – ஆண்டுகளுக்கும் முந்தைய மிகப் பழமையான தமிழ் மருத்துவத்தின் சிறப்பியல்புகளைப் பல இயல்புகளாகப் பிரித்து இவர் கூறும் பாங்கு கற்கண்டின் சுவையினும் மிகு சுவைபடவே அமைந்துள்ளன!

தமிழ் (சித்த) மருத்துவம் சம்பந்தப்பட்ட இலக்கியங்கள் அனைத்தையும் – பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட – செவிவழி வழங்கப்பட்டுப் பின்னர் சுவடிகளாக உருவான சித்தர் மருத்துவ நூல்கள் முதல், தற்போதைய மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்களில் மூஆலிகைகள் பயன்படுத்தப் பெறும் மருத்துவ முறைகளுடன், குறள், சிலம்பு, திருமந்திரம், சங்க நூல்கள் முதலிய பழந்தமிழ் நூல்கள் ஊடாகத் தற்காலத் தமிழ் (சித்த) மருத்துவ நூல்களையும் ஆராய்ந்து, தமிழ் இலக்கியத்தில் தமிழ் (சித்த) மருத்துவத்தின் சிறப்பைத் தெள்ளத் தெளிவாக இனிமையுடன் இந்நூலில் விளக்கியுள்ளார்.

ஆமூலிகைகள், உலோகங்கள் முதலியவற்றின் மருத்துவக் குணங்கள், அவற்றை மருத்துவம் செய்யும் செயல் முறைகள் – செய்ய வேண்டிய காலங்கள் மற்றும் அவற்றை நோய்க்குப் பயன்படுத்தும் முறைகளோடு நோய் அணுகாது முன்கூட்டியே தடுத்துக் கொள்ளும் முறைகளையும் தெளிய ஆய்ந்து அனைவருக்கும் புரியும் வகையில் அழகு தமிழில் அளித்துள்ளார்.

நூல் முழுவதும் ஆங்காங்கே பழந்தமிழ் நூல்களின் பாடல்களை எடுத்துக் காட்டாகக் கையாண்டு, நமக்கும் அவற்றை விருந்தாக்கி சுவைபட அளித்துள்ளமை அன்னாரின் தமிழ்ப் பக்திக்கும், ஆராய்ச்சி அறிவிற்கும் சான்றாக அமைந்துள்ளன.

முக்கியமாகத் திருக்குறளின் மருந்து அதிகாரத்தின் பத்துக் குறள் பாக்களுடன் குறள் முழுவதும் விரவிக்கிடக்கும் மருத்துவம் சார்ந்த பாடல்களையும் இவர் எடுத்துக் காட்டித் தொகுத்துத் தந்துள்ள பாங்கு இவரின் குறள் பற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

மேலும் ஐம்புலன்கள், பஞ்ச பூதங்களின் பரிணாமம், கோள்களின் இயக்கம் இவை எல்லாம் எப்படி உடல் நிலத்தைப் பாதிக்கின்றன என்று, தமிழ் (சித்த) மருத்துவம் வழி நன்று தக்க சான்றுகளுடன் விளக்குவது இவரின் பரந்து தெளிந்த அறிவுக்கும் சான்றாகின்றன.

ஆக இந்நூல், தமிழ் (சித்த) மருத்துவ முறைகளின் பல துறைகள் பற்றியும் தெள்ளத் தெளிவாக ஐயந்திரிபற விளக்குகின்றது.

தமிழ் (சித்த) மருத்துவ உலகிற்கும் – தமிழ் மக்களுக்கும் – ஏன்.. உலக மக்கள் அனைவருக்குமே நோயின்றி வாழ வழிகாட்டும் கிடைத் தற்கரிய "பொக்கிசம்' இந்நூல் என்றால் பொருந்தும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்நூலைப் படித்துத் தெளிவதோடு இந் நூலைத் தங்கள் குடும்பச் சொத்தாகக் கொண்டு வாழ்வார்களேயாயின் – தங்களுக்குத் தாங்களே மருத்துவர்கள் ஆகி நோயற்ற வாழ்வு வாழும் வகை தெரிந்தவர்களாக மாறுவார்கள் என்பது உறுதி ! உறுதி!! முற்றிலும் உறுதி!!!

""சித்த மருத்துவத்தில் பல அரிய முறைகள் காணப்படுகின்றன. மருத்துவத்தால் எளிதில் குணப்படுத்த இயலாது எனக் கூறப்படுகின்ற மரபு நோய்களுக்கும், முதிர்வு நோய்களுக்கும் மருத்துவம் கூறப்படுகின்றது.

""அம்மருந்து முறைகளைக் கண்டறிந்து, மருத்துவத்துக்குப் பயன்படச் செய்யும் முறையில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், தமிழ் மருத்துவம் மேம்பாடு அடையும்.''

இவைபோன்று மற்றும் சில கருத்துகளைத் தனது முடிவுரையில் ஆசிரியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இக் கருத்துக்கள் உற்று நோக்கற் பாலதாகும். இக்கருத்துக்களைக் செயல்வடிவமாக்குதற்கு தமிழக அரசின் உதவிக்கரம் கிடைக்குமானால் மனித சமுதாயம் பெரும் பயன் அடையும்.

இந்நூலைப் பூங்கொடி பதிப்பகம் வெளியிட பெருமனங்கொண்டு அனுமதி அளித்த ஆசிரியருக்கு எங்கள் நன்றி.

பதிப்பகத்தார்

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions