If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
என்னுரை

தமிழ் மருத்துவம் என்று தோன்றியது? எப்படித் தோன்றியது என்று அறியவொண்ணா மயக்கத்தில் மயங்கிக் கிடந்த மயக்கத்தைப் போக்க, தமிழ் மருத்துவ வரலாற்றாய்வு தேவைப்பட்டது. தமிழ் மருத்துவத்தைக் கூறும் தனி நூல்கள் இருந்தனவா? என்னும் வினாவுக்கு விடை கூறும் மருத்துவ நூலாய்வு வேண்டியிருந்தது. பன்முனை ஆய்வுகள் மூஆலம் தமிழ் மருத்துவத் திறனைத் திறந்து காணும் முயற்சிக்குத் திறவுகோல் தேவைப்பட்டது. 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மை நாகரிகங்கொண்ட தமிழ்ப் பண்பாட்டுடன் பின்னிக் கிடந்த மருத்துவ உண்மைகளைக் கண்டறிய வேண்டிய கடப்பாடு கண்முன் நின்றது. அத்தகைய உணர்வின் வெளிப்பாடுடைய அறிஞர்கள் மேற்கொண்ட பணியுடன் இணைந்து செயல்பட எனக்குக் கிடைத்த ஆய்வுப் பணி அமைந்தது.

முகம் தெரியாமல் முகவரியில்லாமல் தத்தளித்த என்னைத் தத்தெடுத்தது, தமிழ்! இருளில் இருந்த என்னை வெளிச்சத்துக்கு அழைத்து வந்தது, தமிழ்! என்னைக் கண்டெடுத்த தமிழுக்கு, எனது வணக்கத்தைத் தெரிவிக்கவே எனது ஆய்வுப் பணியை மேற்கொண்டேன்.

இது, பட்டம் பெறுவதற்காகவோ பதவி பெறுவதற்காகவோ செய்யப்பட்ட ஆய்வல்ல. தமிழ் இனத்துக்குத் தமிழின் பெருமையை அறியச் செய்வதற்காகச் செய்யப்பட்ட ஆய்வாகும்.

தமிழ் மருத்துவம் சார்ந்த தகவல்களும் நூல்களும், காலத்துக்கும் கரையானுக்கும் இரையாகின; எஞ்சியவை எங்கெங்கோ இடம் பெயர்ந்தன; தனி மனித உடமையாகிச் சிறைப்பட்டன. இந்நிலையில், எனது ஆய்வுப் பணி நிறைவடையுமா? என்னும் கேள்விக்கு ஆட்பட்டது. என் நிலைமை, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல ஆய்வுக் களத்தை அறிய முடியாத தடைகளுக்கு இடையே திகைத்து நின்றபோது, உதவிக்குக் கை கொடுத்தோர் சிலர். அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்ந்து நன்றியறிதல் என் கடமையாகும்.

எனது ஆய்வுப் பணிக்குத் "தடையின்மைச் சான்றிதழ்' வழங்கிய சென்னை, இந்திய ரிசர்வ் வங்கி நிருவாகத்துக்கும், என்னை ஆய்வு செய்ய அனுமதி வழங்கிய "சென்னைப் பல்கலைக் கழகத்துக்கும், எனது நன்றி.

என்னை ஆய்வாளனாகத் தேர்வு செய்து ஊக்கப்படுத்திய சென்னைப் பல்கலைக் கழக அண்ணா பொதுவாழ்வியல் துறைத் தலைவர், பேராசிரியர் முனைவர் இரா. தாண்டவன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நறைந்த நன்றி.

எனது ஆய்வு நறைவடைய அருந்துணை புரிந்து, ஆய்வேடு நறைவாக அமையக் காரணமாக அமைந்ததுடன் எனது ஆய்வுப் பணிக்கு வழிகாட்டியாக விளங்கி அணிந்துரை வழங்கியவருமான பேராசிரியர் முனைவர் கோ. கிருட்டிணஆர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

எனது ஆய்வுப் பணியைக் கண்காணித்து நெறிப்படுத்திய சென்னைப் பல்கலைக் கழக ஆமூதறிஞர் குழு உறுப்பினர்களுக்கும், அரிய உதவிகள் புரிந்த கனிணி அறிவியல் துறையைச் சேர்ந்த எஸ். இரமேஷ் அவர்களுக்கும் எனது நன்றி.

முனைவர் பட்ட ஆய்வாளர் என்னும் நிலைக்கும் எனது வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்கியவரும் வங்கித் தொழிற் சங்கத்தின் தந்தையுமாகியவரும் (TNBEF, (AIBEA) RBIEA, AIRSSA, AIRBROA) ஆகிய சங்கங்களை நிருவி, நிருவகித்தவரும் தமிழ்ப் பெரியாருமாகிய திரு. அரங்க. பார்த்தசாரதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி.

நான், கல்வியால் முதன்மை நிலையடையவும் தேவையான பொருளாதார வளர்ச்சிக்கும் வாழ்வின் உயர்வுக்கும் ஊன்றுகோலாக இருந்துவரும் சென்னை, ரிசர்வ் வங்கி, துணை மேலாளர் திரு. பி. நாராயணன் அவர்களுக்கு (ஓய்வு) எனது இதயம் கனிந்த நன்றி.

சித்த மருத்துவ நூல்கள் பலவற்றைத் திரட்டியவரும் அவற்றைப் பாதுகாத்தவரும், சித்த மருத்துவ ஆய்வுகள் பல நிகழ்த்தியவருமாகிய சித்த மருத்துவர் எம். முருகானந்தம் அவர்கள் (அமரர்) பயன்படுத்திய நூல்கள், சுவடிகள் அனைத்தையும் எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், அவற்றை எனது ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொள்ள வாரி வழங்கிய பெருங்கொடையாளர் கோவை, சூளூர், எம். கருணையானந்தம் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

சித்த மருத்துவத்தின் சிறப்பை, தமிழ் மருத்துவ இலக்கிய வளத்தை எடுத்துரைத்த பேராசிரியர் முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கும், தமிழ்நாடு அரசு, சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் அருணாசலம் அவர்களுக்கும் எனது நன்றி.

தமிழ் மருத்துவ நூல்கள் தந்துதவிய டாக்டர் ஆர். தியாகராஜன் (அமரர்) டாக்டர் ஆ. ஆனந்தகுமார் (அமரர்) ஆகியோர்க்கு எனது அஞ்சலி.

எனது ஆய்வுப் பணிக்குப் பயன்பட்ட நூலகங்களான கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவன நூலகம், சென்னை. அறிஞர் அண்ணா மருத்துவக் கல்லூரி நூலகம், சென்னை, இந்திய ரிசர்வ் வங்கித் தமிழ் மன்றம், சென்னை, ரோஜா முத்தையா நூலகம், சென்னை, ஆகிய நூலக நிருவாகிகளுக்கு நன்றி.

என் ஆய்வேட்டிற்கு மதிப்புரையாகவும் கருத்துரையாகவும் சிறப்புரை வழங்கிய அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர், பேராசிரியர் டாக்டர் புது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் B.I.M., M.D. (Siddha) (சித்த) அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

எனது ஆய்வேடு அச்சாக உதவிய திருமதி முனியம்மாள் வாசுதேவன் அவர்களுக்கும், எனது ஆய்வேடு நூலாக வெளிவருவதற்கு வேண்டிய முயற்சிகள் செய்த பருத்தியூர் முனைவர் கே. சந்தானராமன் அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

ஆய்வேட்டை நூல் வடிவமாக வடிவமைத்துத் தந்த சென்னை, அன்னை கிராபிக்ஸ், உரிமையாளர் திரு. கேசவன் அவர்களுக்கும், சிறந்த முறையில் அச்சிட்டுள்ள சென்னை, அமர் ஆப்செட் உரிமையாளர் அவர்களுக்கும் எனது நன்றி.

"தமிழில் மருத்துவ இலக்கியங்கள்' என்னும் எனது ஆய்வேட்டினை ஆய்வு செய்து, அதனை நூல் வடிவமாக்கி வெளியிட மனமுவந்து முன்வந்து துரிதமாக வெளியிட்ட சென்னை, பூங்கொடி பதிப்பக உரிமையாளர் திரு. வே. சுப்பையா அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி.

எனது ஆய்வுப் பணி நடைபெற்ற போதில், எனக்கு ஏற்பட்ட வேதனைகளையும் சோதனைகளையும் கடந்துவரவும் எனது ஆய்வேடு நிறைவாக அமையவும் காரணமாகவும் காரமாகவும் கடுமையாகவும் விளங்கிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.

இந்த ஆய்வேட்டினை நுகர்ந்து, பயனை அறிந்து பாராட்டுரையும் வாழ்த்துரையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி.

வணக்கம்.

அன்பன், இர. வாசுதேவன் எம்.ஏ.,எம்.ஃபில், பி.எச்டி.,
3, ஏ5/6, "அருணா'
10ஆவது குறுக்குத் தெரு,
பெசண்ட் நகர், சென்னை – 600 090.
தொலைபேசி: 044 24460662

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions